VIDEO: 'காப்பான் சூர்யா' பாணியில்... 'இயற்கை விவசாயி'யாக மாறிய தோனி!... தேங்காய் உடைத்து... பூமி பூஜை செய்து... தெறிக்க விடும் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி தர்பூசணி பயிரிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில், தோனி இயற்கை முறையில் தர்பூசணி விதைகளை பயிரிடுகிறார். விவசாயிகள் பயிரிடுவதற்கு முன்பு, பூமி பூஜை செய்வர். அதைப் போலவே, தோனியும் பூமி பூஜை செய்து, பின்னர் தர்பூசணி விதைகளை அவரே நிலத்தில் ஒவ்வொன்றாக ஊன்றுகிறார்.
மேலும், தனது சொந்த ஊரான ராஞ்சியில் இந்த தர்பூசணி தோட்டத்தை அமைப்பதாக அந்த ஃபேஸ்புக் பதிவில் தோனி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 நாட்களுக்கு முன்பாக பப்பாளி நடவு செய்து தோட்டம் அமைத்த நிலையில், தற்போது தர்பூசணி பயிரிடுவதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விவசாயம் செய்வது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது என தோனி அந்த பதிவில் நெகிழ்ந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் இவ்வாறு இயற்கை விவசாயம் செய்வது, விவசாயத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
