'உலகக் கோப்பை தொடரில் தொடரும் காயம்'... 'தவானை தொடர்ந்து அடுத்த வீரரும் விலகல்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 25, 2019 11:08 AM
உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிரடி ஆட்டக்காரர் ரஸல் விலகுவதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதியை நோக்கி பரபரப்பான ஆட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, உலகக்கோப்பையின் முக்கியமான கட்டத்தில் முன்னணி வீரர்கள் காயத்தால் விலகுவதுதான், அணிகளுக்கு அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல், உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக அவரால் விளையாடமுடியவில்லை. முழங்கால் காயம் அவருக்கு மேலும் பிரச்னையை கொடுக்க தற்போது இந்தத் தொடரில் இருந்து விலகுகிறார். ரஸலுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர் சுனில் அம்ப்ரீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஷிகர் தவான், ஆப்கானிஸ்தானின் மொஹமத் ஷெஷாத் ஆகியோர் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அதிரடி மன்னன் ரஸலும் வெளியேறி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் வியாழக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், இரண்டு அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
