'அது என்ன அவ்ளோ பெரிய தப்பா..'.. 'அதத்தவிர நான் என்ன பண்ணிட்டேன்'.. பாய்ந்த கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 24, 2019 04:50 PM
கொட்டாவி விட்டதைத் தவிர, வேறு என்ன தவறு செய்தேன், வேறு எந்த பாவமும் தான் அறியவில்லையே என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி , தென் - ஆப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து 6 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அடுத்துவரவிருக்கும் 3 புள்ளிகளையும் வெல்லுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.
முன்னதாக, லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்ற பின்பு, சர்ஃபரஸ் கிரவுண்டில் நின்று கொட்டாவி விட்டதைக் காட்டி இணையவாசிக்ள் ட்ரோல் செய்தும் மீம்ஸ் போட்டு கலாய்த்தும் விமர்சித்தும் வந்தனர். இதுகுறித்து சர்ஃப்ரஸ் அஹமதுவிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதில், ‘கொட்டாவி விடுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அது இயற்கை. அதைத் தவிர நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனால் என் கொட்டாவியை வைத்து சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். சம்பாதிக்கட்டும்’ என்று பேசினார். மேலும் கடந்த மேட்சில் பீல்டிங் சரியில்லாததால் , நிறைய கேட்சுகளைத் தவற விட்டதாகவும், அதனால் இம்முறை அதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.