‘பாகிஸ்தான் மேட்சில் இந்திய ரசிகர் செய்த காரியம்..’ வைரலாகும் ஃபோட்டோ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 24, 2019 05:46 PM
கடும் எதிர்பார்ப்பிற்கு இடையே நடந்துமுடிந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தது. அதேசமயம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விமர்சனத்திற்கு ஆளானது பாகிஸ்தான் அணி. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் செய்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய அணியின் நீல நிற சட்டை அணிந்த அவர் பாகிஸ்தான் ரசிகர்களுடன் சேர்ந்து அந்த அணியை உற்சாகப்படுத்தியுள்ளார். அவர், “நெய்பர்ஸ் சப்போர்ட்! கமான் பாகிஸ்தான்” என எழுதியிருந்த காகிதத்துடன் மகிழ்ச்சியாக பாகிஸ்தான் அணியை உற்சாகப்படுத்தும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ எனப் பலரும் இதைப் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.
#SpiritOfCricket 👏 #CWC19 pic.twitter.com/CKgnDEAWBF
— Cricket World Cup (@cricketworldcup) June 23, 2019
