VIDEO: திருவிழா முடிச்சிட்டு வீட்டுக்கு போகும்போது திடீரென கவிழ்ந்த படகு.. 2 பேர் மாயம்.. பதற வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆற்றில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள சிந்து ஆற்றின் கரையோரத்தில் நேற்று முன்தினம் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் அருகில் உள்ள ஊர்மக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா முடிந்து 10 பேர் ஆற்றின் மறு கரையில் உள்ள தங்களது வீட்டுக்கு படகில் சென்றுள்ளனர்.
படகு ஆற்றின் கரைக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தீடீரென நிலைதடுமாறியுள்ளது. இதனால் பயந்துப்போன பயணிகள் பதற்றத்தில் எழுந்து நின்றுள்ளனர். இதனை அடுத்து உடனே படகு கவிழ்ந்ததில், அதில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்துள்ளனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு மறு கரையில் இருந்தவர்கள் உடேன ஆற்றில் நீந்தி காப்பாற்றியுள்ளனர்.
A boat carrying 10 persons capsized in Sindh river in Bhind eight persons were rescued and two were missing. They were returning after attending a religious feast @ndtv @ndtvindia pic.twitter.com/fpJrE3Y769
— Anurag Dwary (@Anurag_Dwary) January 29, 2022
இதில் படகில் பயணித்த 10 பேரில் 8 பேர் பத்திரமாக மீட்கபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு இளம்பெண்ணும், சிறுவன் மட்டும் காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படகு ஆற்றில் கவிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.