'யாரா இருந்தாலும் வெயிட் பண்ணனும்'... 'ஹலோ, இந்த பென்ட்லி கார் யாரோடது தெரியுமா'?... '7 மணி நேரம் காத்திருப்பு'... பெட்ரோல் பங்கில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பெட்ரோலுக்காக 7 மணி நேரம் காத்திருந்தும் இறுதியில் பெட்ரோல் கிடைக்காமல் போனது தான் சோகத்தின் உச்சம்.

இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை உலகமே அறியும். இந்த பாதிப்பு தற்போது உச்சத்தில் உள்ளது. இதனால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலரும் பல மணி நேரம் பெட்ரோல் போடக் காத்திருந்தும் பெட்ரோல் போட முடியாமல் பலரும் திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடுவதற்காக 2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பென்ட்லி கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அந்த காருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு வாகனங்களும் பெட்ரோல் போடுவதற்காக வந்து நின்றுள்ளது. ஆனால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இல்லை, எனவே பெட்ரோல் போட முடியாது என அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளார்கள்.
அப்போது தான் அந்த கார் உலகின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கார் என்பது தெரியவந்தது. ஆனால் யாராக இருந்தாலும் காத்திருக்கத் தான் வேண்டும், தற்போது பெட்ரோல் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கார் 7 மணி நேரம் காத்திருந்தும் பெட்ரோல் போட முடியாமல் திரும்பிப் போயுள்ளது.
கோடி கோடியாகப் பணம் இருந்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் பெட்ரோல் போட முடியாமல் 7 மணி நேரம் காத்திருந்து வெறுங்கையுடன் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
