அந்த நேரத்துல அஸ்வின் எனக்கு ‘மெசேஜ்’ பண்ணியிருந்தாரு.. வாய்ப்பு கிடைக்காத ஏக்கம்.. இளம் வீரர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதபோது அஸ்வின் மெசேஜ் செய்து ஆறுதல் தெரிவித்ததாக இளம் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் பல ஷர்துல் தாகூர், வாசிங்கடன் சுந்தர், சைனி, சுப்மன் கில் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த தொடரில் தமிழக வீரர் நடராஜன் நெட் பவுலராக சென்றிருந்தார். அப்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயத்தில் வெளியேறியதால், இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில் விராட் கோலி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களாக திடீரென விலகினர். இதனால் இளம் வீரர்களை கொண்ட இந்திய பலம் மிக்க ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அதில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
சமீப காலமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது ஷமி கூட்டணி அமர்களமாக பந்து வீசி வருகிறது. இந்த ஜோடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிரட்டி வருகிறது. அதனால் பல இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் காத்துள்ளதாக விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் நீண்ட காலமாக அணியில் இடம் கிடைக்காமல் காத்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தனக்கு இடம் கிடைத்தாது குறித்து அப்போதே வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அப்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மெசேஜ் செய்து ஆறுதல் கூறியதாக உனட்கட் கூறியுள்ளார்.
அதில், ‘ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய இந்திய அணியில் ரிசர்வ் பவுலர்களாக சென்றிருந்தவர்களுக்கு கூட விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அஷ்வின் பாய் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். “உனக்காக நான் வருத்தப்படுகிறேன். ரஞ்சி சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தாய். உன் விளையாட்டு மற்றும் மனநிலையில் தெளிவாக இரு. உனக்கான நேரம் வரும்” என அஸ்வின் கூறினார்’ என்று உனட்கட் கூறியுள்ளார்.