அப்பாவை இழந்த சிறுவனின் ஆசை.. நிறைவேற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 07, 2023 09:18 PM

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தந்தையை இழந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Cristiano Ronaldo fulfill wish of Toddler who lost his father

                       Images are subject to © copyright to their respective owners.

நிலநடுக்கம்

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அண்டை நாடான சிரியாவும் ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதில் ஏராளமான சிறுவர்கள் தங்களது தாய், தந்தையை இழந்து தவித்துவருகின்றனர். துருக்கி மற்றும் சிரியாவுக்கு தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.

Cristiano Ronaldo fulfill wish of Toddler who lost his father

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இந்த மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒன்று நபில் சயீத் எனும் சிறுவனுடையது. சிரியாவை சேர்ந்த நபிலின் தந்தை பூகம்பத்தால் மரணமடைந்திருக்கிறார். தற்போது தனது தாயுடன் நபில் வசித்து வருகிறான். சிறுவயதில் இருந்தே கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்க்க வேண்டும் என நபில் ஆசைப்பட அவனது ஆசையை சவூதி அதிகாரிகளுக்கு சிலர் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

கிறிஸ்டியானோ ரோனால்டோ

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. களத்தில் இவர் காட்டும் அதிரடி காரணமாக கோடிக்கணக்கான மக்கள் இவரை தங்களது ஆதர்சமாக கருதுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை தொடரில் காலிறுதியில் போர்ச்க்கல் வெளியேறியது உலக கால்பந்து ரசிகர்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Cristiano Ronaldo fulfill wish of Toddler who lost his father

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த சூழ்நிலையில், பொழுதுபோக்கு ஆணையத்தின் சவூதி இயக்குநர்கள் குழுவின் தலைவர் துர்கி அல்-ஷேக் சிறுவன் நபில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். உடனடியாக சவூதிக்கு சிறுவனை வரவழைத்த அவர் அல் பதீன்  - அல் நாசர் அணிகளுக்கு இடையேயான போட்டியை தனது தாயுடன் காண செய்திருக்கிறார்.

Cristiano Ronaldo fulfill wish of Toddler who lost his father

 Images are subject to © copyright to their respective owners.

அதன் பின்னர் தனது ஆதர்ச நாயகனான ரொனால்டோவை சந்தித்திருக்கிறான் நபில். ரொனால்டோவை பார்த்தவுடன் ஓடிச் சென்று நபில் கட்டியணைத்துக்கொள்ளும் இந்த வீடியோவை துர்கி அல்-ஷேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags : #CRISTIANO RONALDO #KID #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cristiano Ronaldo fulfill wish of Toddler who lost his father | Sports News.