பிஸ்கட்டை ஆசையா வாங்கிக்கொண்ட சிறுவன்.. இறங்குற இடம் வந்ததும் நெகிழ வச்சுட்டானேப்பா.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 31, 2023 10:08 AM

ரயிலுக்குள் தனக்கு அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவனுக்கு பெண் ஒருவர் பிஸ்கட்டை கொடுக்கும் வீடியோ தற்போது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Woman gave biscuit to kid and his reaction wins Hearts video

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | “சென்னைல ஒரு தளபதி இருக்கார்னு எனக்கு இளைய தளபதினு வெச்சாங்க.. ஆனா விஜய்க்கு அந்த பட்டம்” - சரவணன் Breaks

ரயில் பயணங்கள் எப்போதுமே சுவாரசியமானவை. முன்பின் தெரியாத புதிய மனிதர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை ரயில் பலருக்கும் கொடுப்பதுண்டு. அப்போது இனம், மொழி ஆகியவற்றைக் கடந்த ஒரு பிணைப்பு அந்த மக்களிடையே உருவாக்கி விடுகிறது. அந்த அன்பின் வெளிப்பாடாக நடக்கும் சில விஷயங்கள் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல நினைவாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படியான ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Woman gave biscuit to kid and his reaction wins Hearts video

Images are subject to © copyright to their respective owners.

அந்த வீடியோவில் ரயிலுக்குள் தனது மகனுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே இளம்பெண் ஒருவர் அமர்ந்து அந்த சிறுவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சிறுவனை கொஞ்ச  நினைக்கிறார் அந்த இளம் பெண். அப்போது சிறுவனுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா? என அவனுடைய அம்மாவிடம் இளம்பெண் கேட்கிறார்.

Woman gave biscuit to kid and his reaction wins Hearts video

Images are subject to © copyright to their respective owners.

அவர் ஒப்புக் கொள்ளவே சிறுவனிடம் பிஸ்கட்டை இளம் பெண் கொடுக்கிறார். அமைதியாக இருந்த சிறுவன் பிஸ்கட்டை பார்த்ததும் புன்னகைக்கிறான். அதன் பிறகு அதனை ஆர்வத்துடன் வாங்கிக் கொள்ளவும் செய்கிறான். தொடர்ந்து சிறுவனுடன் கொஞ்சி பேசியபடி பயணிக்கும் இளம்பெண் தன்னுடைய இடம் வந்ததும் ரயிலில் இருந்து இறங்குகிறார். அப்போது சிறுவனிடம் பாய் சொல்லிவிட்டு அவர் கீழ இறங்கி ஜன்னல் வழியே வந்து சிறுவனை மீண்டும் பார்க்க சிறுவனின் முகத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது.

Woman gave biscuit to kid and his reaction wins Hearts video

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் விரலை கெட்டியாக பிடித்துக் கொண்டு சிறுவன் விடுவிக்க மறுக்கிறான். சிறிது நேர பயண நேரத்திலேயே தனக்கு உதவி செய்தவர்களிடம் இருந்து பிரிவதை விரும்பாத அந்த சிறுவனின் குணம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது

Also Read | “என் மகள் டிரஸ்ஸ கிழிச்சு, முடிய பிடிச்சு அடிச்சாங்க” - பிரிக்யா தந்தை உருக்கம் Exclusive

Tags : #WOMAN #BISCUIT #KID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman gave biscuit to kid and his reaction wins Hearts video | India News.