"மெஸ்ஸி தான் பெஸ்ட்"... கூச்சலிட்ட சிறுவன்.. ரொனால்டோ கொடுத்த பதில்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை நோக்கி கூச்சலிட்ட சிறுவனுக்கு கொடுத்த பதில் தான் கால்பந்து ரசிகர்களுக்கு மத்தியில் பேச்சாக இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "MGR ரசிகரா?.. சிவாஜி ரசிகரா?".. கோபிநாத்தின் கேள்விக்கு முதல்வர் MK ஸ்டாலினின் அசத்தல் பதில்.. Exclusive!!
கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. களத்தில் இவர் காட்டும் அதிரடி காரணமாக கோடிக்கணக்கான மக்கள் இவரை தங்களது ஆதர்சமாக கருதுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை தொடரில் காலிறுதியில் போர்ச்க்கல் வெளியேறியது உலக கால்பந்து ரசிகர்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் விளையாடி வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
சவூதி ப்ரோ லீக்
சவூதி அரேபியாவில் வைத்து துவங்கி இருக்கும் சவூதி ப்ரொபெஷனல் லீக் தொடர் உலக கால்பந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அல் நாசர் அணிக்காக ஜாம்பவான் ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்ட்டிருக்கிறார். இந்த தொடரில் இதுவரையில் 19 போட்டிகளில் விளையாடியுள்ள அல் நாசர் அணி 14 போட்டிகளில் வெற்றிபெற்று பட்டியலில் டாப்பில் இருக்கிறது.
இந்நிலையில், அல் நாசர் மற்றும் அல் பதீன் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று Mrsool Park Stadium-ல் நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் அல் பதீன் கை ஓங்கி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அதன் பிறகு அல் நாசர் அணி வீரர்கள் தங்களது அதிரடியை காட்டினர். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றது. போட்டிக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் ரொனால்டோ முன்னே சென்று கூச்சலிட்ட சம்பவம் சற்றுநேரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ரொனால்டோவின் பதில்
பிரேக்கில் ரொனால்டோ உள்ளே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவன் ரொனால்டோவை பார்த்து,"மெஸ்ஸி உங்களை விட சிறந்தவர்" என கூச்சலிட்டிருக்கிறார். அப்போது ரொனால்டோ. அப்படியென்றால் மெஸ்ஸி விளையாடுவதை பார்க்க சென்றிருக்கலாமே என கூறியதாக சொல்லப்படுகிறது.
போர்ச்சுக்கல் நாட்டின் ஊடகம் மார்க்கா இதுகுறித்து அளித்திருக்கும் செய்தியில் தன்னை நோக்கி கூச்சலிட்ட சிறுவனை பார்த்து,"இது மிகவும் சுலபமான போட்டியாக இருந்தது" என ரொனால்டோ கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Bro is pissed after 3-1 win 🤣🤣🤣🤣 never a team player pic.twitter.com/vf4CTZFqnB
— Dream⚜ (@ParisianDream__) March 4, 2023

மற்ற செய்திகள்
