எலெக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டிய பில் கேட்ஸ்.. சச்சினை ரேஸ்-க்கு அழைத்த ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 06, 2023 10:10 PM

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ள எலெக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Bill Gates drives Mahindra electric Auto video goes viral

                     Images are subject to © copyright to their respective owners.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Bill Gates drives Mahindra electric Auto video goes viral

Images are subject to © copyright to their respective owners.

பில் கேட்ஸ்

பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் ஆனந்த் மஹிந்திரா, அசீம் பிரேம்ஜி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ள Mahindra Treo எலெக்ட்ரிக் ஆட்டோவை பில் கேட்ஸ் ஓட்டியிருக்கிறார்.

Bill Gates drives Mahindra electric Auto video goes viral

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த வீடியோவை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில்,"புதுமைக்கான இந்தியாவின் ஆர்வம் வியக்க வைக்க தவறுவதில்லை. நான் எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டினேன். 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) வரை பயணிக்கும் இந்த ஆட்டோ 4 பேர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் போக்குவரத்துத் துறையில் கார்பன் உமிழ்வு தடுப்பு துறையில் பங்களிப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bill Gates drives Mahindra electric Auto video goes viral

Images are subject to © copyright to their respective owners.

ரேஸ்

இந்த நிலையில், இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த பதிவில்,"ட்ரியோவை இயக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி பில் கேட்ஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் EV Drag Race ல் கலந்துகொள்ள பில் கேட்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இதன் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : #ANAND MAHINDRA #BILL GATES #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bill Gates drives Mahindra electric Auto video goes viral | India News.