"இது 'ஆ' தான்.."... டீச்சரிடம் மழலை மொழியில் வாதம் செய்த கியூட் சிறுவன் .. இணையத்தை கலக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டீச்சரிடம் மாணவர் ஒருவர் கியூட்டாக வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் டீச்சருடன் மழலை மொழியில் வாக்குவாதம் செய்யும் மாணவர் ஒருவரின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், டீச்சர் ஒருவர் மாணவரிடம் ஆ எழுத்தை அவர் எழுதி இருக்கும் விதம் பற்றி பேசுகிறார். அப்போது, "இப்படி உனக்கு யார் 'ஆ' போட கத்துக்கொடுத்தா?" என டீச்சர் கேட்க, "இது 'ஆ' தான்" என்கிறான் அந்த சிறுவன். தொடர்ந்து "நான் உனக்கு போட்டுக்கொடுத்த 'ஆ' இது இல்லையே" என டீச்சர் சொல்ல, அந்த சிறுவன் தலையில் கை வைத்துக்கொண்டு "அச்சோ கடவுளே தொல்லை தாங்க முடியல" என்கிறான்.
இதனை கேட்டு புன்னகைக்கும் அந்த ஆசிரியர்,"நான் உனக்கு சொல்லிக்கொடுத்த 'ஆ' இப்படி இல்லையே" என்கிறார். அதற்கு "இது கரெக்ட்டா தான் இருக்கும்" என சிறுவன் சொல்ல, "இது கரெக்ட்டாவே இல்லை" என்கிறார் அந்த ஆசிரியர்.
"நான் போட்ட 'ஆ' மாதிரி இருந்தா தான் நான் கரெக்ட் போட முடியும். இது எப்படி இருக்குனு பாரு" என்கிறார் ஆசிரியர். அதற்கு "இது என்னோட 'ஆ' தான்" என கியூட்டாக சொல்கிறான் அந்த சிறுவன். தொடர்ந்து, "இது நல்லா தான் இருக்கும்" என சிறுவன் கூற, "நீ இப்படி 'ஆ' எழுத வேண்டாம். புத்தகத்துல இருக்க மாதிரி தான் எழுதணும்" என சிறுவனிடம் சொல்கிறார் அந்த ஆசிரியர்.
இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், பிழையாக எழுதிய மாணவரை அன்புடன் தொடர்ந்து திருத்தும் பணியை பொறுமையுடன் மேற்கொள்ளும் ஆசிரியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அட நீங்க சொல்ற மாதிரில்லாம் எழுத முடியாது டீச்சர்.!
ஆஆஆஆ 🤣🤣🤣 pic.twitter.com/YrsXKN5PuB
— டேனியப்பா (@minimeens) December 13, 2022
Also Read | யாரை முதல்ல போட்டோ எடுக்குறது?.. மாப்பிள்ளை - பெண் வீட்டார் இடையே வந்த தகராறு.. களேபரமான கல்யாண வீடு..!