கையில கரண்டி விளையாடுதே.. சாண்ட்விட்ச் செய்யும் குட்டி செஃப்.. ..😍 க்யூட் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 24, 2023 11:54 AM

சிறுவன் ஒருவன் தனக்குத்தானே சாண்ட்விச் செய்து சாப்பிடும் க்யூட்டான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Kid making sandwich alone for himself video goes viral

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலனுக்கு Good Bye.. 54 வயசு முதியவரை திருமணம் செய்த இளம்பெண்.. இப்ப இப்படி ஒரு சிக்கலா.?

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் சிறுவன் ஒருவன் தனக்குத்தானே சாண்ட்விச் செய்து சாப்பிடும் க்யூட்டான வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

அந்த வீடியோவில் அடுப்பின் மேல் மிகப்பெரும் தோசைக்கல் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரே அமர்ந்திருக்கும் சிறுவன் சமையல் கலைஞர் போல உடையணிந்து அமர்ந்திருக்கிறான். விறகடுப்பில் தீ எரிய, ரொட்டியை சுழற்றி கல்லில் சுழல விடுகிறான் இந்த ஸ்டைலிஷ் chef சிறுவன். அதன் பிறகு, முட்டையை அதில் உடைத்து ஊற்றுகிறான்.

சற்று நேரத்தில் முட்டை வெந்தபிறகு அதன் மீது கெச்சப்பை ஊற்றி, பின்னர் ரொட்டி வெந்துவிட்டதா என பரிசோதிக்கிறான் சிறுவன். இதனை தொடர்ந்து, ரொட்டியை இரண்டாக பிரித்து அதனுள் முட்டையை வைக்கிறான். கடைசியாக தான் உருவாக்கிய சாண்ட்விச்சை ருசியும் பார்க்கிறான்.

Images are subject to © copyright to their respective owners.

பொதுவாக குழந்தைகள் தங்களது அம்மாவிடம் இருந்தே சமையல் கலையை கற்றுக் கொள்கின்றனர். இணையத்தின் வீச்சும் பல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துவிடுகின்றன. இந்நிலையில் இந்த கியூட் chef எங்கிருக்கிறார், சமையல் செய்யப்பட்டது எந்த இடம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த வீடியோவை Alvin Foo எனும் பக்கத்தில் ஒருவர் பகிர, பின்னர் இதனை The Figen எனும் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். பல லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

நெட்டிசன்களுக்கு மத்தியில் இந்த வீடியோ வைரலாக பரவ," க்யூட் chef" என்றும் "சமையல் கலைஞரின் உடை அருமையாக உள்ளது" எனவும் "சாண்ட்விச் செய்யும் குட்டி மாஸ்டர்" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Also Read | எடைக்கு எடை தங்கம் தான் சீர்வரிசை..! மகள் திருமணத்தில் மொத்த பேரையும் வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா ...

Tags : #KID #SANDWICH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kid making sandwich alone for himself video goes viral | World News.