ஐபிஎல் 2023 : CSK கேப்டன் தோனியா? ஸ்டோக்ஸ்-ஆ?.. கிறிஸ் கெயில் சொன்ன அசத்தலான பதில்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சமீபத்தில் நடந்து முடிந்தது.

Image may subject to © copyright to their respective owner.
முன்னதாக, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மிக முக்கியமான வீரர் சென்னை அணியில் இணைந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து புனே அணியில் ஆடி இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பின்னர், தற்போது மீண்டும் தோனியுடன் இணைந்து சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டோக்ஸ் பெரிய அளவில் பங்கு வகிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதே போல பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதால் அனுபவம் வாய்ந்த கேப்டனாக அவர் சர்வதேச போட்டிகளில் இருக்கும் சூழலில் தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை அவர் பார்த்துக் கொள்வார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். மறுபக்கம், இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கூட, முதலில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட, பின்னர் தொடரின் பாதியில் மீண்டும் தோனி கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
அதே போல, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படுவாரா என்றும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த கிறிஸ் கெயில், "தோனி விளையாடுவதாக இருந்தால் அவர் தான் அணியை தலைமை தாங்க வேண்டும்" என பதில் தெரிவித்துள்ளார்.
Also Read | சுற்றுலா போன காதலனுக்காக தேர்வு எழுத போன பெண்.. உண்மை தெரிய வந்ததும் நேர்ந்த பரிதாபம்!!

மற்ற செய்திகள்
