பென் ஸ்டோக்ஸ்-ஐ சூப்பராக வரவேற்ற CSK வீரர்.. இணையத்தில் பட்டையைக் கிளப்பும் பதிவு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

Also Read | "அடேங்கப்பா".. பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்ததும் CSK-வில் நடந்த அற்புதம். "இத யாரும் எதிர்பார்க்கலையே"
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக ஏல தொகையாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இப்படி ஐபிஎல் மினி ஏலத்தில் பல முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக தொடர்ந்து தங்களின் கருத்துகளையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ் இணைந்ததையடுத்து மற்றொரு சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அதிக வைரலாகி வருகிறது.
பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த தீபக் சாஹர், "Ooo Ben Stokes 😂" என்றும் குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸை அணியில் வரவேற்றது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது.
Also Read | போடு.. ஐபிஎல் ஏலம்.. அன்றே கணித்த ஸ்ரீகாந்த்.. அப்படியே நடந்துருக்கே.. வியந்த ரசிகர்கள்!!

மற்ற செய்திகள்
