"அடேங்கப்பா".. பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்ததும் CSK-வில் நடந்த அற்புதம். "இத யாரும் எதிர்பார்க்கலையே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சுற்றியுள்ள பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் வைத்து நடைபெற்று வருகிறது.

Also Read | முதல் ஆளா ஏலத்துல போன வில்லியம்சன்.. "ஆனாலும் இப்டி ஒரு விலையா.?".. மனம் குமுறும் ரசிகர்கள்!!
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய ஒரு பகுதி தான் இந்த ஏலம். ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை எடுக்க கடுமையாக போட்டி போடவும் செய்வார்கள்.
இந்த நிலையில், தற்போது பல வீரர்கள் சிறப்பான தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போய்க் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வரலாறையும் படைத்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அதே வேளையில், மறுபக்கம் ஜோ ரூட், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட பல வீரர்களும் Unsold என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததும் நடந்த சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ், ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த நிலையில், ரஹானே மாற்று பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்ததும் அற்புதமான Reunion ஒன்று நடந்துள்ளது. இதற்கு முன்பு தோனி, ரஹானே மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்காக இணைந்து ஆடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சுமார் 6 ஆண்டுகள் கழித்து ஒரே அணியில் தற்போது சிஎஸ்கே மூலம் இணைந்துள்ளனர். இதனால், தோனி, ரஹானே மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் புனே அணி ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்
