'ஒரு மனுஷன் 'சிக்ஸர்' அடிக்க வந்தா'... 'ரெண்டு பேரும் 'கெட்ட பசங்க பா'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 10, 2019 11:30 AM

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதன் 14-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின.இந்த போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியினை பெற்றது.இந்த போட்டியில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பந்து வீச்சு ஆஸ்திரேலிய வீரர்களை அதிர செய்தது.

Bhuvneshwar Kumar and Jasprit Bumrah has won 3 wickets

நேற்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உறுதியான அடித்தளத்தை அமைத்தார்கள்.இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது.அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.அதோடு கேப்டன் கோலியும் தனது 50-வது அரைசதத்தை எட்டினார்.

இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களை இந்திய பௌலர்கள் தெறிக்க விட்டார்கள்.பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பந்துகளை சமாளிக்க முடியமால்  ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள்.அற்புதமாக பந்து வீசிய இருவரும் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.இருவரும் ஆஸ்திரேலிய வீரர்களை தெறிக்க விட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.