ஐய்யோ..! இதனாலதான் தோனி விளையாடலையா?.. காரணத்தை வெளியிட்ட சிஎஸ்கே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 26, 2019 08:38 PM

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

IPL 2019: MS Dhoni not play today due to fever

ஐபிஎல் டி20 லீக்கின் 44 -வது போட்டி இன்று(26.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

கடந்த முறை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனிக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டத்தால் அந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால் அப்போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்னை அணி விளையாடியது. ஆனால் அப்போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. கடந்த முறை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இதனால் இதில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தோனிக்கு உடல்நிலை சரியில்லாததால் இப்போட்டியில் விளையாடமுடியாமல் போனது என சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #YELLOVE #WHISTLEPODU #CSKVSMI