ஏன் நேத்து ‘தல’ பேட்டிங் செய்யல தெரியுமா?.. சீக்ரெட் உடைத்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 24, 2019 09:33 PM

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனி பேட்டிங் செய்யாததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

IPL 2019: I need to be careful with my back, says MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டி நேற்று(23.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 83 ரன்களிம் எடுத்து இருந்தனர்.

இதனை அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், வாட்சன் 96 ரன்களும், ரெய்னா 38 ரன்களும் அடித்து அதிரடி காட்டினர். இந்நிலையில் வழக்கமாக கேதர் ஜாதவுக்கு பின் பேட்டிங் செய்ய தோனி களமிறங்குவார். ஆனால் தோனிக்குப் பதிலாக பிராவோ களமிறங்கினார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இதுகுறித்து போட்டி முடிந்த பின பேசிய தோனி ‘என் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்து உள்ளது. உலகக்கோப்பை நெருங்குவதால், அதற்கு முழு உடற்தகுதியுடன் இருக்க விரும்புகிறேன். அதனால் தான் சென்னையில் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை’ என தோனி கூறினார்.

Tags : #IPL2019 #IPL #CSK #MSDHONI #WHISTLEPODU #YELLOVE