10 ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு! எந்த ஊர் முதலிடம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Apr 29, 2019 10:28 AM
மார்ச் மாதம் நடைப்பெற்ற 10 ஆம் வகுப்பு தேர்வை மொத்தம் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 95.2% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 93.3% சதவீதமும், மாணவிகள் 97% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை அறிய www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்தாண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.8% சதவீதமாகும்.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் - 96.12%
ஆங்கிலம் - 97.35%
கணிதம் - 96.46%
அறிவியல் - 98.56%
சமூக அறிவியல் - 97.07%
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்களின் விவரம்
திருப்பூர் - 98.53%
இராமநாதபுரம் - 98.48%
நாமக்கல் - 98.45%
ஈரோடு - 98.41%
கன்னியாகுமரி - 98.08%
மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 152 சிறைகைதிகளில் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
