‘அப்போ தோனி, இப்போ ஜடேஜாவா விடமாட்டோம்’.. வேற லெவலில் கலாய்த்த சிஎஸ்கேவின் வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 04, 2019 07:32 PM

வர்ணனையார் சஞ்சய் மஞ்சரேகரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஜடேஜாவுக்கு ஆதரவாக சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது.

After Jadeja now CSK slam Sanjay Manjrekar

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 -வது இடத்தில் இருந்து வருகிறது. முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேகர் தனது சொந்த கருத்துக்களை பேசிவதாக குற்றசாட்டு எழுந்தது.

இதில் ரசிகர் ஒருவர் வர்ணனையாளர் பதவியில் இருந்து சஞ்சய் மஞ்சரேகரை நீக்க வேண்டும் என ஐசிசியுடன் புகார் கடிதம் கொடுத்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தோனியின் ஆட்டம் குறித்து விமர்சித்து வந்த மஞ்சரேகர், உலகக்கோப்பையில் விளையாடிவரும் ஜடேஜா குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நீங்கள் விளையாடியதைக் காட்டிலும் இரு மடங்கு போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார். இந்த பதிலை கேட்டு 8 முறை நிலவை சுற்றிவிட்டு திரும்ப வந்ததாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளது.