'அதே இடம்'.. ஆனா '15 வருஷத்துக்கு அப்றம்’.. நெகிழும் 15 வயது மகன்.. மெர்சல் ஃபோட்டோஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 04, 2019 07:07 PM

உலகப் புகழ்பெற்ற முதலைகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வின். உலகத் தொலைக்காட்சிகள் பலவற்றுக்கும், வைல்டு லைஃப் ஆவணப்படங்களைத் தயாரித்து வழங்கியவர் இவர். தனது 44-வது வயதில், கடந்த 2004-ஆம் ஆண்டு ஸ்டிங்ரே என்கிற மீன் தாக்கியதால் உயிரிழந்த ஸ்டீவ் இர்வின், ஆஸ்திரேலியாவில் காட்டுயிர் என்கிற அருங்காட்சியகத்தை நடத்தி வந்தவர்.

same place, same crocodile, but 15 years apart viral photos

இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பாக முர்ரே என்கிற முதலைக்கு உணவூட்டும் போது எடுக்கப்பட்டது, அந்த அதி அற்புத க்ளிக். இப்போது அப்படியே தற்போது ஸ்டீவ் இர்வினின் மகன், ராபர்ட் இர்வின் அதே கோணத்தில் , அதே முர்ரே என்கிற முதலைக்கு, தனது தந்தையைப் போலவே உணவளிக்கும் ஃபோட்டோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் ஒருசேர பதிவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் ராபர்ட் இர்வின் எழுதியுள்ள பதிவு இதயத்தை நெகிழவைப்பதோடு, முதலையின் அருகில் இத்தனை துணிச்சலாக நின்று இவர்கள் உணவளிக்கும் நிகழ்வு ஆச்சரியத்தையும் தந்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘நானும் தந்தையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆனால் ஒரே இடத்தில் ஒரே முதலையுடன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,  தந்தை ஸ்டீவ் இர்வின் 15 வருடங்களுக்கு முன்பு இந்த முதலைக்கு உணவளித்த படமும், தற்போது 15 வயதேயான, அவரது மகன் ராபர்ட் இர்வின் அதே முதலைக்கு உணவளித்த படமும்தான் மேலும் சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது ராபர்ட் இர்வினும், அவரது சகோதரர் பிண்டியும் இணைந்து , தங்களது தந்தை உருவாக்கிய அருங்காட்சியகத்தை பராமரித்து வருகின்றனர்.

Tags : #VIRAL #MURRAY #PHOTO #CLICK #ROBERT IRWIN