'ஏன் 'பொண்டாட்டி' கூட எனக்கு ஓட்டு போடலியா?'... 'குமுறி குமுறி' அழுத வேட்பாளர்... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 24, 2019 11:03 AM

நடந்து முடித்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகளும் வெளிவந்து விட்டன. பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.இதனிடையே சுயோட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர்,கதறி அழும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

candidate gets only 5 votes, says there are 9 members in my own family

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் நீது சட்டர்ன் வாலா.இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார்.இருப்பினும் தான் அதிகமான வாக்குகளை பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். இதனிடையே நேற்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில்,வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

காரணம் அவர் பெற்றது வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே.இதனால் படுதோல்வி அடைந்த அவர் சோகத்தின் உச்சிக்கே சென்றார்.இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி எடுத்தனர்.அப்போது அவரது மன குமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்தார்.''எனக்கு வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே விழுந்துள்ளது. எனது குடும்பத்திலேயே 9 ஓட்டுகள் உள்ளன.அப்படி இருக்கும் போது,எனக்கு எப்படி 5 ஓட்டுகள் மட்டும் விழும்'' என கேள்வி எழுப்பினார்.

உடனே அவரை மறித்த பத்திரிகையாளர்கள் 'உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களுக்கு ஓட்டு போடாமல் இருந்திருக்கலாம்' என கூறினார்கள். உடனே கதறி அழ தொடங்கிய அவர் 'நான் தேர்தலில் வெற்றி பெற கூடாது என்ற காரணத்திற்காக செய்யப்பட்ட சாதி.எனவே நான் இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன்' என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதை கேட்ட பத்திரிகையாளர்கள் நகைப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்கள்.