VIDEO: பைக் வாங்க நெனக்கிற ஒவ்வொரு ‘மிடில் கிளாஸ்’ பையனுக்கும் அந்த வலி தெரியும்.. ‘என்னா மனுசன்யா’.. நெஞ்சை கலங்க வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்இளைஞரின் விலையுயர்ந்த பைக்கை சாலையில் நபர் ஒருவர் ஏக்கத்துடன் பார்த்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இளைஞர்களுக்கு பைக் மீதான பிரியம் நாளுக்குநாள் அதிகரிப்பதற்கு அநேக காரணங்கள் இருந்தாலும், அதற்கு முதல் காரணம் அவர்களது அப்பாதான். ஏனென்றால், என்றோ ஒரு நாள் தன் அப்பா தனது பழைய எம்.ஐ.டி வண்டியிலோ, டிவிஸ் எக்செல் வண்டியிலையோ அல்லது சைக்கிளிலேயோ தனது மகனை உலகை காண்பிக்கிறார். அப்போதுதான் பயணம் குறித்தும், பயணிப்பது குறித்தும், எதில் பயணிக்க வேண்டும் போன்ற சூழல்கள் அறிமுகமாகிறது. ஆனாலும் வாலிப கனவுகள் அனைத்தும் கல்லூரி படிப்பை முடிக்கையில், மோதித் தள்ளும் யதார்த்த பொருளாதார பின்னணியில் இந்த கனவுகள் கரைய தொடங்கிறது.
தன் வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டாலும், தன் கனவு பைக்கை ஒரு நபர் சாலையில் ஒட்டும்போது, அவரது வர்க்க பின்னணி, பொருளாதார பின்னணி குறித்து எல்லாம் ஆராயாமல், நம் வயதொத்த ஒருவர் இந்த வண்டியை ஒட்டுகிறார் என்ற பெருமை வந்தைடைகிறது. அப்போது அந்த வண்டியை ஒட்டுபவரிடம் சில நேரம் வண்டி குறித்து கேட்பதும், நெடுநாள் கனவை சிறிது நேரம் கண்களின் வழி காணும் இன்பம் கிடைக்கிறது. ஏக்கத்தின் வலி, கனவை நிறைவேற்ற இயலாமை, வாழ்க்கை பாரம் நொடிப்பொழுதில் கரைந்து, அது பூமிக்கும், வானத்துக்கும் பறப்பது போலான மகிழ்ச்சி மனதில் அரும்புகிறது.
இன்றைய மிடில் கிளாஸ் இளைஞர்கள் பலரின் கனவாக இருப்பது பைக் வாங்குவதுதான். மாதம் 10000, 20000 என ஊதியம் வாங்கும் பலரும் அதில் பாதியை EMI கட்டவே செலவிடும் குடும்ப சூழலில் சிக்கியுள்ளனர். எப்படியாவது கனவு பைக்கை வாங்கிவிட வேண்டும் என வருடம் முழுக்க பணம் சேர்த்து வைத்து வாங்க நினைத்தால், அப்போதுதான் எதாவது பெரிய செலவு வரும். இப்படியே பலரின் பைக் கனவு, கனவாகவே போயுள்ளது.
பொல்லாதவன் படத்தில் மிடில் கிளாஸ் பையனாக நடித்திருக்கும் தனுஷ், பைக்கிற்காக ஏங்கும் பல இளைஞர்களின் ஏக்கத்தை கண்முன் காட்டியிருப்பார். ஒவ்வொரு முறையும் பைக் ஷோருக்கு சென்று விலையை மட்டும் கேட்டுவிட்டு சோகமாக திரும்புவார். ஒரு கட்டத்தில் அப்பா கொடுக்கும் பணத்தை கொண்டு தனது கனவு பைக்கை வாங்கி வருவார்.
இந்த நிலையில் குரு ராகவன் என்ற இளைஞர் ஒருவர் தனது பைக்கில் டூர் சென்றபோது, சாலையில் சென்ற நபர் ஏகத்துடன் அவரது பைக்கைப் பற்றி விசாரிப்பார். அப்போது அந்த பைக்கின் ஆக்சிலேட்டரை ஆர்வமாக முறிக்கிப் பார்ப்பார். இதை குரு ராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த பலரும் ஒவ்வொரு மிடில் கிளாஸ் இளைஞனின் ஏக்கம் இதுதான் என உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
