இந்தியாவில்.. உலகின் உயரமான பாலம்.. "ஏதோ வெளிநாடு மாதிரி இருக்கே.." மெய்மறந்த நெட்டிசன்கள்.. வைரலாகும் புகைப்படம்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் அமைந்து வரும் உலகின் உயரமான பாலம் ஒன்றின் புகைப்படம், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள செனாப் ஆற்றின் மேல், ரெயில்வே பாலம் அமைக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதன் தற்போதைய புகைப்படம் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் உயரமான பாலம்
உலகின் மிக உயரமான ரெயில்வே பாலமாக, இந்த செனாப் பாலம் உருவாகி வருகிறது. 1315 மீட்டர் நீளத்தில் 17 இடைவெளி பகுதிகளைக் கொண்ட இந்த ரயில்வே பாலத்தின் அதிகபட்ச உயரம், கடல் மட்ட அளவிலிருந்து 359 மீட்டராக உள்ளது. ரூ.1,250 கோடி மதிப்பில் உருவாகி வரும் இந்தப் பாலம், 266 கிமீ வேகத்தைத் தாங்கக் கூடியது.
வைரலாகும் புகைப்படம்
மேலும் இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் புகைப்படம் ஒன்றை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது பகிர்ந்துள்ளார்.
மெய் மறந்த நெட்டிசன்கள்
மேகத்திற்கு மத்தியில், வானுயர காணப்படும் இந்த் செனாப் பாலத்தின் புகைப்படம், இணையவாசிகளை வாய் பிளக்கச் செய்துள்ளது. பார்ப்பதற்கு வேறு ஏதோ நாடு போலவும், இன்னொரு உலகம் போலவும் தோன்றும் இந்த பாலம், பார்ப்பவர்களை மதி மயங்க செய்யும் அளவுக்கு, அமைக்கப்பட்டு வருகிறது. இதனை பார்ப்பவர்கள், அதிகம் பகிர்ந்து வரும் நிலையில், செனாப் பாலத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகத்திலேயே உயரமான இந்த செனாப் ரெயில்வே பாலம், இந்தாண்டு டிசம்பர் மாதத்தில், திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.