Valimai BNS

"ஏன் முரட்டு சிங்கிளா இருக்காங்க தெரியுமா".. "அவங்கள அப்படி சொல்லாதீங்க பாவம்".. ஆண்களுக்காக குரல் கொடுத்த பெண்

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Pandidurai T | Feb 23, 2022 02:23 PM

குறிப்பாக 27 –33 வயது நிரம்பிய இளைஞர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்புவது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே.  "சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே தம்பி, சீக்கிரம் ஒரு நல்ல சேதி சொல்லு" என்று ஊரில் உள்ள பெரிவர் முதல் சிறுவர்கள் வரை ஒரு இளைஞரின் மனதை துளைக்கும் கேள்வி. இன்றும் நம்ம ஊரு பக்கம் போனா போதும் "எப்ப கல்யாண பண்ணி கறிச்சோறு போடப்போற, உன் அம்மா, அப்பா பாவம் இல்லையா" ஆறுதலாக அட்வைஸ் செய்வது வழக்கமாகிவிட்டது.

Woman who gave voice to unmarried men: Viral video

முரட்டு சிங்கிள்

சமீப காலமாக singles, மொரட்டு singles என்ற அடைமொழிகள் கொண்டு கல்யாணம் ஆகாத இளைஞர்கள் விளையாட்டாகப் பதிவிடும் பதிவுகள் மிக அதிகமாகவே பார்க்க முடிகிறது.  இந்த இளைஞர்கள் அவர்களது வாழ்க்கையை வெற்றியாக வாழத்தெரியாத தோல்வியாளர்களைப் போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எத்தனை கல்யாணமாலை நிகழ்ச்சிகள் வந்தாலும், எத்தனை இணையதளப் பதிவேடுகள் வந்தாலும் இன்றளவும் திருமணம் என்பது போட்டியாகத்தான் பார்க்கப்படுகிறது.

90களில் கல்யாணம்

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு இளைஞன் எங்கே தவறான வழியில் சென்றுவிடுவானோ என்ற அஞ்சி, கால் கட்டு போட்டால் சரி ஆகிவிடும் என்று திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இன்றைய நிலை ஆண்களுக்கு மிக மோசமான சூழலாக அமைந்துள்ளது.   இப்போது, மாப்பிள்ளை வீட்டார் என்ற கர்வமெல்லாம் மலையேறிவிட்டது. பெண் வீட்டாரின் டிமாண்ட் அதிக எதிர்பார்ப்பா இருக்கு.  நல்ல பையனா என்ற ஒற்றைக் கேள்வியைத் தாண்டி இன்று பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். வெளிநாடு செல்வாரா, தனிக்குடித்தனமா, கூட்டு குடும்பமா,  வீடு கட்டிட்டாரா, சம்பளம் எவ்வளவு, எங்கே வேலை, நல்ல கம்பெனியா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். பரீட்சையைவிட இதற்கு விடை காண்பது இக்கால ஆண் பிள்ளைகளுக்கு ஒரு சவால்தான்.

கனவுகளை தொலைக்கும் இளைஞன்

அதுவும் வீட்டிற்கு தலப்பிள்ளையாக பிறந்து தங்கைகளை கரைசேர்த்த பின்பு வீடு கட்டி முடித்து அவன் ஒரு பெண்ணை பார்க்க சென்றால் அவனுக்கு 30 வயதை கடந்திருக்கும். 30 வயதில் பல கேள்விகள் மாப்பிள்ளை சொட்டை, முடி நரைச்சிருக்கு, சம்பளம் கட்டுப்படி ஆகாது இப்படி பல வீட்டில் இருக்கும் ஏழ்மையை மாற்ற போராடும் ஒவ்வொரு இளைஞருக்கும் கல்யாணம் என்பது கனவாகத்தான் இருக்கிறது. ஆண்கள் கல்யாணம் ஆகாமால் வெட்டியாக சுத்துவதற்கு காரணத்தை தேடுகின்றனர்.

ஆண்களுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இப்போது வீட்டில் ஒரு பெண் இருப்பார்கள். சாதிக்குள்ளே திருமணம், காதல் திருமணத்திற்கு தடை, ஜாதகம் பார்த்து திருமணம் என்ற தடைகளை தாண்டி ஒரு ஆணும், பெண்ணும் திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டியுள்ளது. அதில் பெற்றோருக்கும் பிடித்திருக்க வேண்டும். காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைப்பது அரிது தான். இந்த தடைகல் உடைபடும் வரை ஆண்கள் மட்டும்  அல்ல பெண்களும் பிடிித்த வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பெண்களே புரிஞ்சுக்கோங்க

இந்நிலையில், யார் என்று தெரியாத பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் ஆண்களுக்கு ஏன் கல்யாணம் ஆகலை, ஆண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்த வீடியோ வந்து கல்யாண வயதில் இருப்பாங்கல்ல பொண்ணுங்க அவங்களுக்கு, பெண் பாக்க வந்தா பையன் சொட்டை, அங்கிள் மாதிரி இருக்கான், தயவு செய்து இப்படி மட்டும் சொல்லாதீங்க" என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #UNMARRIED MEN #GIRLS #VIRAL VIDEO #WEDDING #LIFESTYLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman who gave voice to unmarried men: Viral video | Lifestyle News.