"இனி கடவுள் நினைச்சாதான்".. தகர்க்கப்படும் 100மீ உயர கட்டிடம்.. நிபுணர்கள் சொல்லிய வியக்கவைக்கும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நொய்டாவில் அமைந்துள்ள இரட்டை கட்டிடம் ஆகஸ்டு 28 ஆம் தேதி இடிக்கப்பட இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

இரட்டை கட்டிடம்
நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
3700 கிலோ வெடிமருந்துகள்
இங்குள்ள உயரமான கட்டிடத்தில் 32 தளங்களும், அடுத்த கட்டிடத்தில் 29 தளங்களும் அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி. ஆகஸ்டு 28 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. கட்டிடம் வெடிபொருட்களால் தகர்க்கப்பட 9 வினாடிகள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரட்டை டவரில் உயரமான கட்டிடத்தில் வெடிபொருட்கள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கடவுள் தான் தடுக்கமுடியும்
இதுகுறித்து பேசிய கட்டிட தகர்ப்பு பணியினை மேற்கொள்ளும் Edifice நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மயூர் மேத்தா,"இப்போதைக்கு கடவுளை தவிர வேறுயாராலும் இந்த இடிப்பு பணிகளை தடுக்க முடியாது. தற்போது பணியாளர்கள் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் நிரப்பப்பட்டுள்ள வெடிபொருட்களை இணைக்கும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். 100 மீட்டர் தொலைவில் இருந்து ரிமோட் மூலமாக இடிப்புப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. தகர்ப்பின்போது எழும் புழுதி அடங்க 10 நிமிடங்கள் ஆகும். திடக்கழிவுகள் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்னர் இதுபோன்ற தகர்ப்பு பணிகள் நடைபெற்றதில்லை"என்றார்.

மற்ற செய்திகள்
