பாத்ரூம் போக வேண்டிய இடமாயா அது.. கொஞ்சம் விட்டால் மொத்த பேரும் பரலோகம் போய் இருப்பாங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவர் கதவைத் திறந்ததால், விமானம் உடனே தரையிறக்கபட்டது.

விமானத்தில் பயணிப்பது ஒரு சாகசத்தை நிகழ்த்துவது போல் ஆகும். நாளுக்கு நாள் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் செய்யும் செய்யும் அலும்புகளால் தவிர்க்க முடியாத நிலையில், விமானம் தரையிரக்கப்படுகிறது. அல்லது சக பயணியிடம் சண்டைக்கு செல்வது, மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவது போன்ற செய்திகளை படித்து தெரிந்திருக்கிறோம். ஆனால், அமெரிக்காவில் ஒரு நபர் விமானத்தில் செய்த செயல் விமானிகளையே அதிர வைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து 'விமானம் 1775' புறப்பட்டு வாஷிங்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கண்சாஸ் சிட்டி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் எதற்காக தரை இறங்கியது என்பது குறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.
விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு பயணி விமானியின் அறைக்குள் நுழைந்துள்ளார். அவர் அங்கிருக்கும் கட்டுபாட்டு பட்டனை பயன்படுத்தி விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத விமானி சுதாரித்துக்கொண்டு அந்த நபரை தடுக்க முயன்றார். இதனையடுத்து அங்கு வந்த விமான பணிபெண்கள் மற்றும் பணியாளர்கள் அந்த நபரை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். அதன்பின் அந்த நபரின் தலையில் ஒரு விமான பணியாளர் காபி கோப்பையினால் அடித்து கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
பின்பு விமானம் தரை இறங்கிய பிறகு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பயணி போதையில் இருந்தாரா? பாத்ரூம் என நினைத்து கதவை திறக்க முயன்றாரா? அல்லது வேண்டுமென்றே அப்படி செயல்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்காவின் மத்திய விமான சேவை நிர்வாகம் இது போன்று 5,981 புகார்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் 4,290 புகார்கள் விமானத்தில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தது தொடர்பானவை.
இதுபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவிலும் நடந்துள்ளன. டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 'கோ ஏர்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் கழிவறை என நினைத்து, விமானத்தின் பின்கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
