'இரை' என நினைத்து 'டவலை' விழுங்கிய 'மலைப்பாம்பு' 'வெற்றிகரமாக' சிகிச்சை அளித்த 'மருத்துவர்கள்'... 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 28, 2020 10:04 PM

ஆஸ்திரேலியாவில் இரை என நினைத்து டவலை விழுங்கிய மலைப்பாம்புக்கு வெற்றிகரமகாக சிகிச்சை அளித்து பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Successful treatment of Python who swallowed the towel

ஆஸ்திரேலியாவில் டேனியல் ஓ சல்லிவன் என்பவர் மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருகிறார். மோன்டி என பெயரிடப்பட்ட அந்த மலைப்பாம்பு 5 கிலோ எடை மற்றும் 3 மீட்டர் நீளம் உடையது. இந்த மலைப்பாம்பு இரை என நினைத்து முழு நீள டர்க்கி டவலை விழுங்கி விட்டது. இதனைப் பார்த்த சல்லிவன் பாம்பை காப்பாற்ற மருத்துவமனைக்கு ஃபோன் செய்தார்.

பாம்புக்கு உடனே, மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் ரேடியோகிராஃபி இயந்திரத்தை பாம்பின் வாய் வழியாக உள்ளே செலுத்தி டவல் இருக்கும் இடம் வரை கொண்டு சென்றனர். பின்னர் எண்டோஸ்கோப் கருவி மூலம் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்த டவல் வெளியே இழுக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.

அதனைப் வீடியோ எடுத்த மருத்துவமனை நிர்வாகம், அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேனியல் ஓ சல்லிவன் "டாக்டர் ஒலிவியா மற்றும் அவரது ஊழியர்களுக்கு நன்றி" தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags : #PYTHON #AUSTRALIA #TOWEL #SWALLOWED #TREATMENT