ஓடுற வண்டி'ல PUSH UPS.. "கெத்து காட்டுறதா நெனச்சி, கடைசி'ல.." நிலை குலைய வைத்த அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலத்தில் சமூக வலைத்தள பக்கத்தில் ஏதாவது ஒன்று வித்தியாசமாக செய்து விட்டாலே, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்து விடலாம்.

அதற்காக, பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், மிகவும் வித்தியாசமான அல்லது வினோதமான ஏதாவது நடனங்களையோ அல்லது வேறு செயல்களையோ, வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், அதே வேளையில் இன்னும் சிலர், மிகவும் ஆபத்தான, உயிருக்கு கூட பாதிப்பு ஆபத்தை ஏற்படும் ஏற்படுத்தக்கூடிய வகையிலான சாகசங்களை செய்ய வேண்டும் என்றும் நினைப்பார்கள்.
அப்படி எதையாவது செய்ய போய், பின்னர் சிக்கலிலும் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி ஏதேனும் வித்தியாசமான சாகசங்களை செய்ய வேண்டும் என்ற நினைப்பில், அதில் ஈடுபடுவார்கள், உயிரிழப்பிற்கு ஆளாகும் அதிர்ச்சியான செய்திகளையும் நாம் நிறைய கடந்து வந்திருப்போம். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவும் பார்ப்போர் பலரையும் அதிர்ச்சியில் உறைந்து போக செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னோ பகுதியில், குப்பை அள்ளி செல்லும் வண்டி ஒன்று, நெடுஞ்சாலை ஒன்றில் இரவு நேரத்தில் வேகமாக சென்று கொண்டிருந்துள்ளது. அந்த சமயத்தில், குப்பை அள்ளும் வண்டியின் மீது ஏறி நின்ற இளைஞர் ஒருவர், கெத்தாக நிற்பதாக எண்ணி, ஆபத்தான சூழலில், Push Ups-ம் எடுக்கத் தொடங்கினார். சுமார் 6 push ups வரை அவர் எடுத்து முடித்து விட்டு, வண்டியின் மீது நேராக நின்ற போது, திடீரென டிரைவரும் பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், சாகசம் காட்டிய இளைஞர், திடீரென வாகனத்தின் மீதிருந்து கீழே நிலைத் தடுமாறி விழுந்தார். மேலும், அந்த இளைஞர் உடலின் பல இடங்களில், படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான வீடியோ ஒன்றை, ஸ்வேதா ஸ்ரீவத்ஸவா என்ற பெண் போலீசார், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது கேப்ஷனில், "சக்திமானாக மாற முயன்ற அந்த இளைஞர், தற்போது அடுத்த சில நாட்களுக்கு உட்காரக் கூட முடியாத அளவுக்கு மாறி உள்ளார். எச்சரிக்கை : தயவு செய்து இது போன்ற ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடாதீர்கள் " என போலீசார் ஸ்வேதா குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
