“கடைசியா ஒரு தடவை பேசணும்”.. நம்பி போன இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கைதான காதலன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடைசியாக ஒரு தடவை பேச வேண்டும் என பாசமாக காதலியை அழைத்து காதலன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | IPL ப்ளே ஆஃப்-ல செலக்ட் ஆகாம வீட்டுக்கு வந்த தவானுக்கு ‘நாக் அவுட்’ விட்ட அப்பா.. ‘செம’ வைரல்..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் ரம்யா கிருஷ்ணன் (வயது 23). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கு, ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று ஸ்ரீதர் தன் காதலியான ரம்யா கிருஷ்ணனிடம் கடைசியாக ஒரு தடவை பேச வேண்டும் என பாசமாக கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய அப்பெண், ஸ்ரீதரை காண சென்றுள்ளார். இருவரும் கார்மாங்குடி வெள்ளாற்று அருகே சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது ஸ்ரீதருக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ரம்யா கிருஷ்ணனை சுத்தியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட ரம்யா கிருஷ்ணன் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அப்போது முட்புதரில் ரம்யா கிருஷ்ணன் படுகாயமடைந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ரம்யா கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து தப்பி ஓடிய காதலன் ஸ்ரீதரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது காதலி வேறொரு நபருடன் திருமணம் செய்யப் போகிறாள் என்ற ஆத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் சுத்தியலால் தாக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.. திடீரென மயங்கி விழுந்து நேர்ந்த சோகம்..!

மற்ற செய்திகள்
