‘ஜிம்மில் வொர்க் அவுட்’.. திடீரென சுருண்டு விழுந்து இறந்த இளைஞர்.. மதுரையில் நடந்த ‘ஷாக்’..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 07, 2022 11:44 AM

மதுரையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai youth died while doing workout at gym

Also Read | ஆத்தாடி எம்மாம்பெருசு.. வலையில் சிக்கிய 100 வயதான ராட்சத லாப்ஸ்டர்..வைரலாகும் வீடியோ..!

மதுரை பழங்காநத்தம் அடுத்த திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ்வரன் என்பவரின் மகன் ஸ்ரீ விஷ்ணு (வயது 27). இவர் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் அப்பகுதியில் உள்ள ஜிம்மில் ஸ்ரீ விஷ்ணு உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஜிம்மில் ஸ்ரீ விஷ்ணு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிக எடை கொண்டு பளு தூக்கும் போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Madurai youth died while doing workout at gym

அங்கு ஸ்ரீ விஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஜிம்மில் அதிக பளு தூக்கி உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "கப்பல்ல ஏறின ஒரு பெண்ணை காணோம்"..கேப்டனுக்கு பறந்த தகவல்.. நடுக்கடல்ல நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல்.. ஆபிசர்கள் சொல்லிய ஷாக் நியூஸ்..!

Tags : #MADURAI #YOUTH #WORKOUT #GYM #மதுரை #இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai youth died while doing workout at gym | Tamil Nadu News.