சென்னையில் முதல்வர் கான்வாயை பைக்கில் முந்திச் சென்ற இளைஞர்.. போலீசார் பிடித்து விசாரித்ததில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வாகனத்தை முந்தி சென்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Also Read | ‘இதனால தான் அப்படி பண்ணேன்’.. மனைவி மரண வழக்கில் கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!
முதல்வர் சாலையில் செல்லும் போது அவரது பயணத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகள் சீராக்கப்படும். அப்போது தனி நபர்கள் யாரும் சாலையில் குறுக்கே வராமல் இருக்க பலத்த பாதுகாப்பு செய்யப்படும். இந்த நிலையில் இன்று மதியம் தலைமை செயலகத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.
அப்போது, தலைமை செயலகத்திலிருந்து போர் நினைவுச்சின்னம் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முதல்வர் கான்வாயை முந்தி சென்றுள்ளார். உடனே இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் நேப்பியர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.
இளைஞர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து அந்த இளைஞரை கோட்டை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் கே.கே நகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது.
மேலும் அந்த இளைஞர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எம்.ஜி.ஆர் நகரில் திருடி வந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடிய இருசக்கர வாகனத்துடன் தப்பிச் செல்வதற்காக மெரினா பகுதிக்கு வந்த போது, முதல்வர் கான்வாயை முந்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அஜித்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read | தகாத உறவை கண்டித்த தம்பி.. ஆத்திரத்தில் ஆள் வைத்து ‘அக்கா’ செஞ்ச காரியம்.. பரபரக்க வைத்த சம்பவம்..!

மற்ற செய்திகள்
