"ஐபோன் மட்டும் இல்லனா என்ன ஆகி இருக்கும்??.." ராணுவ வீரர் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை.. "எப்படி'ங்க நடந்துச்சு??"
முகப்பு > செய்திகள் > உலகம்ஐபோன் மூலம் ஒரு ராணுவ வீரர் உயிர் தப்பிய சம்பவம், பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.
இந்த போரின் காரணமாக, ஏராளமான அப்பாவி மக்களும், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் பாதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், நீடித்து வரும் போரின் காரணமாக ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்களும் தங்களது நாட்டில் இருந்து வேறு நாட்டில் சென்று குடி பெயர்ந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், உக்ரைன் நாட்டின் பல முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, இந்த போரை நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டிற்கு பல உலக நாடுகளும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
அவ்வப்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, பார்ப்போர் பலரையும் கண்கலங்க செய்யும் வகையிலும் அமைந்திருக்கும். இதனிடையே, தற்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், இந்த வீடியோவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், தன்னுடைய Back pack-ல் இருந்து, சேதம் அடைந்த Iphone 11 ஒன்றையும் வெளியே எடுக்கிறார் அந்த ராணுவ வீரர். மேலும் ஒரு வேளை அந்த ஐபோன் Back pack-ல் இல்லை என்றால், நேராக வந்த புல்லட், அந்த ராணுவ வீரரின் உயிரையே பறித்திருக்கும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ, Reddit தளத்தில் பகிரப்படவே, பலரும் ஆச்சரியத்துடன்ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11-ஐ பார்த்து வருகின்றனர். "An apple a day keeps the doctors away" என்றும், ஐபோன் 11 இடத்தில் நோக்கியா போன் இருந்திருந்தால், புல்லட்டே சுக்கு நூறாகி இருக்கும் என்றும் சிலர் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம் எதுவாக இருந்தாலும், Iphone ஒன்றின் உதவியுடன் ராணுவ வீரன் உயிர் தப்பியுள்ள சம்பவம் பலரையும் ஒரு நிமிடம் வியந்து பார்க்க தான் வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
