"காதலுக்கு வயசு முக்கியமில்லை".. 37 வருசம் வயசுல மூத்த பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட வாலிபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைவிட 37 வருடம் மூத்த பெண்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்டது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | உலகின் காஸ்ட்லியான தலையணை.. இவ்வளவு லட்சமா? அப்படி என்ன இருக்கு ஸ்பெஷலா?
அமெரிக்காவின் ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் கரான் மெக்கெய்ன். 24 வயதான இவர் தனக்கு 15 வயது இருந்தபோது ரோமில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் உரிமையாளருடைய தாய் செரில் என்பவரை அப்போது முதன்முறையாக சந்தித்திருக்கிறார் மெக்கெய்ன். அதன் பிறகு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் எதேச்சையாக செரிலை பார்த்திருக்கிறார்.
உள்ளூர் நிறுவனம் ஒன்றில் காசாளராக பணிபுரிந்துவந்த செரிலை தினந்தோறும் சென்று பார்த்துவந்த மெக்கெய்ன் அவர்மீது காதல் வயப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருடன் டேட்டிங்கில் இருந்த மெக்கெய்ன் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது காதலை செரிலிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். செரிலும் மெக்கெய்னின் காதலை ஏற்றுக்கொள்ளவே இருவரும் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
17 பேரன் பேத்திகள்
61 வயதான செரிலுக்கு 7 குழந்தைகளும் 17 பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில், அவர்கள் அனைவரும் செரிலின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் டென்னிசி மாகாணத்தில் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் மீண்டும் ஒருமுறை நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், தங்களது புகைப்படங்களை இருவரும் சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவர்களை லட்சக்கணக்கான மக்கள் சோசியல் மீடியாவில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
தாயாக விரும்புகிறேன்..
தங்களுக்கிடையே 37 வருட வயது வித்தியாசம் இருப்பினும், தான் குழந்தையை வளர்க்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார் செரில். இதுபற்றி அவர் பேசுகையில்," சிலர் என்னை சுயநலவாதி என்கிறார்கள். ஆனால் காதல் அற்புதமானது என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். நான் எங்கள் குழந்தையை வளர்க்க விரும்புகிறேன். எனது வயது காரணமாக வாடகை தாய் மூலமாகவோ அல்லது தத்தெடுத்தோ எங்களது வீட்டுக்கு குழந்தையை அழைத்து வரப்போகிறோம்" என்கிறார் மகிழ்ச்சியாக.
சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தாங்கள் இருவரும் இன்னும் காதலித்து வருவதாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் செரில். இதனிடையே செரிலின் குடும்பத்தினர் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும் அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தங்களுக்கும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் செரிலின் குடும்பத்தினர்..

மற்ற செய்திகள்
