‘அது விபத்து இல்ல’.. டிரைவர் உயிரிழந்த வழக்கில் அதிரடி திருப்பம்.. சரணடைந்த இளைஞர் சொன்ன பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் விபத்தில் உயிரிழந்தவர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘செம சர்ஃப்ரைஸ்’.. CSK இளம் வீரருக்கு கல்யாணம்.. வெளியான க்யூட் வீடியோ..!
சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). டிரைவரான இவர், கடந்த மே மாதம் 5-ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பள்ளிக்கரணை கோவலன் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவர் குமார் சாலை விபத்தில் இறக்கவில்லை எனக் கூறி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். அவர், கார்த்திக்கை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கார்த்திக், சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், போலீசாரிடம் கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கடந்த மே மாதம் 5-ம் தேதி கார்த்திக்கும், குமாரும் ஒன்றாக மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் தாக்கியதில் குமார் படுகாயமடைந்துள்ளார். இதனால் பயந்து போன கார்த்திக், வாகனம் மோதி குமார் காயமடைந்ததாக கூறி வெங்கடேஷ் என்பவர் மூலம் ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீசாரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read |அண்ணனுக்காக கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. களேபரம் ஆன மண்டபம்..!