இரவில் காதலியை சந்திக்கச் சென்ற இளைஞர்.. அடுத்தநாள் புதரில் கிடந்த சாக்குப்பை.. திண்டுக்கல் அருகே பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jul 13, 2022 03:25 PM

திண்டுக்கல் அருகே காதலியை சந்திக்கச் சென்ற இளைஞரை, பெண்ணின் சகோதரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul youth dies after his girlfriend brother attacked him

Also Read | காதல் கணவருடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட மனைவி.. நைட்ல ஏற்பட்ட தொந்தரவு.. திருமணமான ஒரு மாதத்தில் மனைவிக்கு நேர்ந்த சோகம்..!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகே உள்ளது செம்பட்டி கிராமம். இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு விஜயன். 24 வயதான இவர் கொத்தனார் வேலை செய்துவந்தார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் இளம்பெண்ணின் தந்தை தமிழ்செல்வன் மற்றும் சகோதரர் அஜீத்திற்கு தெரியவரவே இதனை கண்டித்திருக்கின்றனர். இதனால் அழகு விஜயன் மற்றும் அஜீத் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

சந்திப்பு

இந்நிலையில், நேற்று இரவு தனது காதலியை சந்திக்க அழகு விஜயன் சென்றிருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, இளம்பெண்ணின் சகோதரர் அஜீத் அங்கு வந்ததாக தெரிகிறது. அப்போது அழகு விஜயனை கடுமையாக தாக்கியிருக்கிறார் அஜீத். இதனால் அங்கேயே மயங்கிவிழுந்த விஜய் மரணமடைந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜீத் மற்றும் அவரது தந்தை தமிழ்ச்செல்வன் விஜயனின் உடலை சாக்குப்பையில் கட்டி ஆத்தூர் காமராஜர் அணை ஓரமாக இருக்கும் புதரில் வீசியுள்ளனர்.

Dindigul youth dies after his girlfriend brother attacked him

விசாரணை

இதனையடுத்து, அதிகாலையில் அஜீத்தின் வீட்டருகே இரத்தம் கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த செம்பட்டி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தவே தமிழ் செல்வன் தனது குற்றத்தை ஒப்புக்கோண்டு சாக்கு பையை வீசிய இடத்தையும் காட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விஜயனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துமவமனைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் செல்வனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அஜித்தையும் கைது செய்யக்கோரி விஜயனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காதலியை சந்திக்கச் சென்ற இளைஞரை, பெண்ணின் சகோதரர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | Breaking: "இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.. மக்கள் வெளியே வரக்கூடாது".. அதிபர் பொறுப்பை கையில் எடுத்த பிரதமர் ரணில்.. முழு விபரம்..!

Tags : #DINDIGUL #YOUTH #GIRLFRIEND #BROTHER #ATTACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dindigul youth dies after his girlfriend brother attacked him | Tamil Nadu News.