"அரசு வேலைக்கு செல்லக் கூடாது".. மனைவியை தடுக்க கணவன் செஞ்ச காரியம்.. திடுக்கிட வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு வேலைக்கு செல்ல விரும்பிய மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டம் கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரிபுல். இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
ரேணுவுக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. ஆனால் அரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கணவர் ஷரிபுல் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று ரேணுகாதுன் தூங்கி கொண்டிருந்த போது, அவரது வலதுமணிக்கட்டை ஷரிபுல் கத்தியால் வெட்டியுள்ளார். துண்டாக்கிய கையை ஆபரேஷன் செய்து இணைத்து விடுவார்களோ எனக் கருதி, கையை மறைத்து வைத்து விட்டார்.
இதுகுறித்து ரேணுகாதுவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த கணவர், ஷரிபுல் தலைமறைவானார். மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
