"அட அட, இது அல்லவோ ஃபேஷன் WALK.." MISS WORLD'க்கே ஜோடி போடுவோமா ஜோடி'ன்னு தயாராகும் இளைஞர்.. யாருயா நீ?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் பல இடங்களில், மிஸ் அழகி போட்டிகளும், ஃபேஷன் ஷோக்களும் நிறைய நடந்து வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இது போன்ற ஃபேஷன் ஷோக்கள் மற்றும் அழகி போட்டிகளில் நடந்து வரும் பெண்கள், மிகவும் நளினத்துடன் ஸ்டைலாக நடந்து வருவார்கள். அதே போல, பல வித்தியாசமான உடைகளையும் அணிந்த படி, அவர்கள் அழகாக நடந்து வருவார்கள்.
ஃபேஷன் ஷோ என்று வந்தாலே, அதன் மேடையின் மீது பெண்கள் அணிந்து வரும் ஆடைகளும், அவர்களின் நடைகளும் தான், மிகப் பெரிய ஹைலைட்டான அம்சமாக பார்க்கப்படுகிறது.
அட, இப்டி ஒரு ஃபேஷன் ஷோவா?..
அப்படி இருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் எந்த மேடையும், ஆடைகளும், ஆட்கள் என எதுவும் இல்லாமலும், தனது கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் கொண்டு, பேஷன் வாக் வருவது தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வருகிறது.
ஃபிஜி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞரான சாஹீல் ஷெர்மன்ட் என்பவர் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஃபேஷன் ஷோவில் ஒரு பெண் எப்படி நடந்து வருவாரோ, அதே போல ஒரு நடையை இந்த இளைஞரும் பின்பற்றுகிறார். ஆனால், இதில் அவர் அணிந்து வரும் உடையும், கொண்டு வரும் பொருட்களும் தான் வேற லெவல்.
பையன் பின்றான்'ல..
பெண்களின் நடை போல, எந்த குறையும் வைக்காத அந்த இளைஞர், நார்மலாக டி-ஷர்ட் அணிந்தபடி, கையில் ஏணி, பாக்ஸ்கள், செடித் தொட்டி, குழந்தை, துடைப்பம், கூடை, டயர், டேபிள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக் கொண்டு அவர் நடந்து வரும் வீடியோக்கள் தான் இன்று இணையத்தில் டாப் லிஸ்ட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நிஜமாக நடக்கும் ஃபேஷன் ஷோக்களை விட, இந்த இளைஞரின் Cat walk மிக அசத்தலாக உள்ளதாக, நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read | "மகனின் Ex கேர்ள் ஃபரண்ட்.. இப்போ அப்பாவின் மனைவி.." 24 வயது இடைவெளி.. வியப்பை ஏற்படுத்தும் காதல் ஜோடி..

மற்ற செய்திகள்
