"கனவு நிறைவேறும் தருணம் அது".. தரைமட்டமாகும் 100 மீ கட்டிடம்.. இறுதி முடிவை எடுக்கும் நிபுணர் சொல்லிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநொய்டாவில் நாளை இடிக்கப்பட இருக்கிறது பிரம்மாண்ட இரட்டை கோபுரம். இதில், இந்திய நிபுணர் ஒருவர் கட்டிடத்தை இடிக்கும் இறுதிக்கட்ட பணியினை மேற்கொள்ள இருக்கிறார்.
Also Read | விண்வெளி'ல இருந்து பாக்குறப்போ.. பூமி'ல தெரிஞ்ச பிரகாசமான புள்ளி.. "அது எந்த இடம் தெரியுமா?"
இரட்டை கட்டிடம்
நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
3700 கிலோ வெடிமருந்துகள்
இங்குள்ள உயரமான கட்டிடத்தில் 32 தளங்களும், அடுத்த கட்டிடத்தில் 29 தளங்களும் அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி. ஆகஸ்டு 28 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. கட்டிடம் வெடிபொருட்களால் தகர்க்கப்பட 9 வினாடிகள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரட்டை டவரில் உயரமான கட்டிடத்தில் வெடிபொருட்கள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கனவு
இந்நிலையில், இதுகுறித்து பேசிய, பிளாஸ்டராக பணிபுரியும் சேத்தன் தத்தா,"நான் 2002 முதல் இந்த பணியில் இருக்கிறேன். அனல் மின் நிலையங்கள், சுரங்கங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை இடிக்கும் பணியை நான் நடத்தியுள்ளேன். ஆனால் நான் பிளாஸ்டராக பணிபுரிய இருக்கும் முதல் குடியிருப்பு கட்டிடம் இதுதான். சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கட்டிடம் இடிக்கப்படும். ரிமோட்டை நான்தான் இயக்க இருக்கிறேன். அது ஒரு கனவு நிறைவேறும் தருணமாக இருக்கப்போகிறது"என்றார்.