VTK D Logo Top
Sinam D Logo Top

"நீங்க ஏன் தம்பி இந்த வேலை பண்றீங்க??".. கேஸ் சிலண்டர் போட வந்த இளைஞர்.. சரளமாக வந்த ஆங்கிலம்.. "விசாரிச்சப்போ தான் யாருன்னு தெரிஞ்சுது"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Sep 14, 2022 11:47 AM

நாம் அடிக்கடி இணையத்தை திறந்தாலே ஏராளமான நிஜ நிகழ்வுகள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என நிறைய விஷயங்கள் வைரலாவதை பார்த்திருப்போம்.

science graduate from up delivers gas cylinder reason melts

Also Read | வெளிநாட்டில் இறந்த கணவர்.. உடலை கேட்டு கதறும் மனைவி.. "இன்னும் எத்தனை அரியநாச்சிகள் வேண்டும்..??" - கொந்தளித்த க/பெ ரணசிங்கம் இயக்குனர்.!

இவற்றுள் அதிர்ச்சிகரமான, வினோதமான, மனதை உருக வைக்கக் கூடிய வகையில் என இப்படி ஏராளமான வகையிலான செய்திகளை நாம் தினம்தோறும் இணையத்தில் அதிகம் பார்க்கலாம்.

அந்த வகையில், தற்போது இளைஞர் ஒருவர் யார் என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் ரவுண்டு வரும் பதிவு ஒன்று, பலரையும் மிரள வைத்துள்ளது.

ராஜேஷ் சிங் என்ற நபர் ஒருவர், தன்னுடைய Linkedin தளத்தில் சந்தீப் யாதவ் என்ற 24 வயது இளைஞர் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் சந்தீப் யாதவ். இவர் கேஸ் சிலிண்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 25 முதல் 30 கேஸ் சிலிண்டர்கள் வரை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியராக இருந்து வருகிறார். மேலும், மாதம் 12,000 ரூபாய் வரை சம்பளமும் பெற்று வருகிறார்.

அப்படி இருக்கையில், சந்தீப் யாதவ் இந்த வேலைக்கு வருவதற்கு முன் என்ன செய்துள்ளார் என்பது தான், அவர் பற்றிய விஷயத்தை இணையத்தில் பகிர ராஜேஷ் சிங்கை தூண்டி உள்ளது. ராஜேஷ் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போடுவதற்காக இளைஞர் சந்தீப் வந்துள்ளார். அப்போது அவர் மிகவும் நன்றாக ஆங்கிலம் பேசவே, அவரிடம் ராஜேஷ் பேச்சு கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் ஒரு அறிவியல் பட்டதாரி என்பது தெரிய வந்துள்ளது.

science graduate from up delivers gas cylinder reason melts

இதனை கேட்டதும் ராஜேஷ் ஒரு நிமிடம் திகைத்து போகவே, படித்த ஏன் இந்த வேலையை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். இது தான் தனக்கு கிடைத்தது என்றும், தனக்கு வரும் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எட்டாயிரம் ரூபாய் தன்னுடைய வயதான பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதி 4000 ரூபாய் கொண்டு சுமார் 20 பேர் உடன் சேர்ந்து தங்கி தன்னுடைய பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருவதாகவும் கூறி உள்ளார் சந்தீப். இது பற்றி அறிந்ததும் ராஜேஷிற்கு ஒரு நிமிடம் அவரை கட்டி அணைக்கவே தோன்றி விட்டது. நிச்சயம் ஒரு நல்ல நாள் வரும் என்ற நம்பிக்கையில் சந்தீப் கடந்து செல்கிறார்.

இது தொடர்பான பதிவு ஒன்றை Linkedin பக்கத்தில் ராஜேஷ் பதிவிட்ட நிலையில் பலரும் ராஜேஷ் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு தருவது தொடர்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | "இதுக்கு நல்ல ஒரு பேரா வைங்கப்பா".. கேரளாவில் 'பப்பட சண்டை'.. கேப்ஷன் போட்டு கலக்கிய ஆனந்த் மஹிந்திரா!!

Tags : #UTTARPRADESH #SCIENCE GRADUATE #DELIVERS #GAS CYLINDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Science graduate from up delivers gas cylinder reason melts | India News.