கோவிலில் சாமிக்கு நடந்த தீபாராதனை.. முட்டிபோட்டு வணங்கிய ஆடு.. ட்ரெண்டாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 12, 2022 11:32 AM

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமிக்கு தீபாராதனை காட்டும்போது ஆடு ஒன்று தலை தாழ்ந்து முட்டிப்போட்டபடி நிற்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Goat kneeling down during aarti at Kanpur temple video

Also Read | T20 WC : "இந்தியா மேட்ச்'ச Live'ஆ தியேட்டர்'ல பாக்கலாம்".. பிரபல Multiplex செய்த அதிரடி ஒப்பந்தம்.. குஷியில் ரசிகர்கள்!!

இணையத்தின் வருகைக்கு பின்னர் சமூக வலை தளங்களின் வளர்ச்சி நம்ப முடியாத வேகத்தில் இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் முக்கிய காரணியாக சோசியல் மீடியா இருக்கிறது. இதில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கும் வீடியோக்கள் சீக்கிரமே வைரலாகிவிடும். சொல்லப்போனால் அப்படியான வீடியோக்களை பார்க்கவே பெரும்பாலானோர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Goat kneeling down during aarti at Kanpur temple video

பரமத் கோவில்

உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் உள்ளது பரமத் கோவில். இங்கே பாபா ஆனந்தேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். இந்த கோவில் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த கோவிலில் ஆனந்தேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அப்போது மக்கள் சாமி தரிசனம் செய்ய, வாசலில் ஆடு ஒன்று தனது முன்னங்கால்களை மடக்கி தலையை தாழ்ந்தபடி நின்றிருக்கிறது. இது அங்கு வந்திருந்த பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவிலில் உள்ள படிக்கட்டில் நிற்கும் அந்த ஆடு ஒருபடியில் தனது கால்களை வைத்து, கடவுளை வழிபடுவது போல பணிந்து நின்ற காட்சி பலரையும் சிலிர்க்க வைத்துள்ளது.

Goat kneeling down during aarti at Kanpur temple video

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவை டேவிட் ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"கான்பூரில் உள்ள பரமத் கோவிலில் பாபா ஆனந்தேஷ்வரின் தீபாராதனையை காண ஆடு ஒன்று முழங்கால் இட்டு அமர்ந்திருக்கும் காட்சி" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, இந்த ஆடு கோவிலின் வெளியே உள்ள சிவலிங்கத்தின் முன்பும் இதேபோன்று தலையை தாழ்ந்தபடி நின்றதாக ஜான்சன் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | கோமாவில் இருந்த வயதான நர்ஸ்.. நினைவு வந்த அப்பறம் அவங்க சொன்ன விஷயம்... மிரண்டுபோன டாக்டர்கள்..!

Tags : #UTTARPRADESH #GOAT #KNEELING DOWN #AARTI #KANPUR TEMPLE #GOAT KNEELING DOWN DURING AARTI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Goat kneeling down during aarti at Kanpur temple video | India News.