55 வயசுல 5-ஆவது கல்யாணம்.. அப்பா போட்ட பிளான்.. ஸ்பாட்டுக்கே போன பிள்ளைங்க.. அடுத்து நடந்த சம்பவம்.?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Sep 02, 2022 12:45 PM

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஷாபி அகமது. 55 வயதாகும் இவருக்கு ஏற்கனவே நான்கு முறை திருமணம் நடந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ஷாபிக்கு 7 பிள்ளைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

BT : up man try for fifth marriage 7 children went to stop marriage

Also Read | இது புதுசால்ல இருக்கு.. விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் சிலை.. பிறந்த தேதிலாம் இருக்கா..?

அப்படி இருக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொள்ளவும் ஷாபி அகமது திட்டம் போட்டுள்ளார்.

இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளும் மிக சிறப்பாக நடந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தந்தையின் அடுத்த திருமணம் பற்றி தெரிந்ததும் தங்களின் தாயுடன் ஏழு பிள்ளைகளும் நேராக திருமணம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். தந்தையின் ஐந்தாவது திருமணத்தை அவர்கள் தடுத்தது மட்டுமில்லாமல், மணமகனாக இருந்த ஷாபி அகமது குறித்து, மணப்பெண்ணின் குடும்பத்திடம் அவர்கள் முழு தகவலையும் கூறி உள்ளனர். மாப்பிள்ளையாக இருந்த ஷாபி அகமது ஏற்கனவே நான்கு திருமணம் செய்தது பற்றி தெரிந்ததும், மணப்பெண்ணின் வீட்டார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

BT : up man try for fifth marriage 7 children went to stop marriage

அது மட்டுமில்லாமல், கைகலப்பாகவும் இது மாறிய நிலையில், திருமணத்திற்காக கூடி இருந்த மக்கள், ஷாபி அகமதை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றது. திருமணம் நடக்க இருந்த இடம் களேபரம் ஆனதால், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, சம்பவ இடம் வந்த போலீசார், ஷாபி அகமதை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

BT : up man try for fifth marriage 7 children went to stop marriage

முன்னதாக ஷாபி அகமது என்ற அந்த நபர், முதல் மற்றும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நபர்களை விவாகரத்து செய்ததாகவும், மூன்றாவது மற்றும் நான்காவது திருமணம் செய்து கொண்ட பெண்களை ஒரு சில காரணங்கள் கூறி, புத்திசாலித்தனமாக பிரிந்து வந்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், தன்னுடைய குடும்பத்தினருக்கு மாதாந்திர செலவுக்கு பணம் கொடுப்பதை ஷாபி அகமது நிறுத்தி விட்டதாகவும், அவரது ஐந்தாவது திருமணம் குறித்து அறிந்ததும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, காவல் நிலையத்தில் ஏழு பிள்ளைகள் புகார் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

Also Read | "வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"

Tags : #UTTARPRADESH #FIFTH MARRIAGE #MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. BT : up man try for fifth marriage 7 children went to stop marriage | India News.