‘கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விமான பணிப்பெண்..’ விமான பாதுகாப்பு அதிகாரி கைது..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 06, 2019 07:03 PM

மும்பையில் விமானப் பணிப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விமான பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Air hostess from Mumbai raped by friend and his roommates

மும்பையைச் சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் தன்னுடன் வேலை செய்யும் விமான பாதுகாப்பு அதிகாரி அவரது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார். சம்பவத்தன்று அந்தப் பெண் தன்னுடன் பணிபுரியும் சுவப்னில் படோனியா என்பவருடன் மது அருந்திவிட்டு அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு 2 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். அவர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சுவப்னிலை போலீஸார் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமான மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #AIRHOSTESS #MUMBAI