கையிலே ஆகாசம்.. முதல் தடவை விமானத்தில் பறந்த இளைஞரின் நெகிழ்ச்சி பதிவு.. வாழ்த்து சொன்ன நடிகை குஷ்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 31, 2023 10:48 AM

தன்னுடைய வாழ்வின் முதல் விமான பயணம் குறித்து இளைஞர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்த ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இந்த நிலையில் அந்த ட்வீட் வைரலாக, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Young man emotional tweet about his first flight journey in his life

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிஸ்கட்டை ஆசையா வாங்கிக்கொண்ட சிறுவன்.. இறங்குற இடம் வந்ததும் நெகிழ வச்சுட்டானேப்பா.. வீடியோ..!  

பொதுவாகவே மிடில் கிளாஸ் மக்களின் லட்சியங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது விமான பயணம். வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என பலரும் நம்மிடம் சொல்லி கேட்டிருப்போம். அந்த வகையில் பலருடைய நீண்ட நாள் விருப்பங்களில் ஒன்றாக விமான பயணம் அமைந்திருக்கிறது. அவர்களுள் ஒருவர் தான் ஹேமந்த் எனும் இளைஞர்.

இவர் சமீபத்தில் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பயணித்திருக்கிறார். அவருடைய முதல் விமான பயணம் இதுவாகும். இதுகுறித்து ஹேமந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் "எனக்கு தற்போது 27 வயதாகிறது. என் வாழ்வின் முதல் விமான பயணம் இதுதான். அதேபோல என் என் வாழ்க்கையின் சிறிய அதிசயம் இதுவாகத்தான் இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என பதிவிட்டு இருக்கிறார். அதனுடன் தன்னுடைய விமான டிக்கெட்டையும் புகைப்படம் எடுத்து அவர் பகிர்ந்து உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த ட்வீட் கொஞ்ச நேரத்திலேயே வைரலாகியது. இதில் நடிகை குஷ்பூ ஹேமந்த்தை வாழ்த்தி கமெண்ட் செய்திருக்கிறார். அதில் "இந்தப் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய முதல் விமான பயணம் குறித்தும் அது ஏன் தங்களது வாழ்வில் ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்பட்டது என்பது குறித்தும் பல நெகிழ்ச்சியான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல அடுத்த முறை விமான டிக்கெட்டின் புகைப்படங்களை பதிவிடும் போது PNR எண்களை மறைத்து பதிவிடும்படியும் சிலர் அறிவுரை கூறி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் ஹேமந்தின் இந்த முதல் விமான பயணத்தை பலரும் வாழ்த்தியதோடு எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | “என் மகள் டிரஸ்ஸ கிழிச்சு, முடிய பிடிச்சு அடிச்சாங்க” - பிரிக்யா தந்தை உருக்கம் Exclusive

Tags : #FLIGHT #YOUNG MAN #FLIGHT JOURNEY #FIRST FLIGHT JOURNEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young man emotional tweet about his first flight journey in his life | India News.