போர் நடந்திட்டு இருக்கும்போது எப்படி அப்படி போட்டீங்க..? பப்ளீஸ் பண்ணிட்டு உடனே ‘டெலிட்’ செய்த ரஷ்யா.. என்ன செய்தி அது..?
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனை வென்றுவிட்டதாக அதிபர் புதினை பாராட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைகளில் உக்ரைனை தாக்கி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
பதற்றமான சூழல்
அதேபோல் உக்ரைன் நாடும் ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
ரஷ்ய செய்தி நிறுவனம் கட்டுரை
இந்த நிலையில், உக்ரைனை ரஷ்யா வென்றுவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்டுரையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டதாவும், ராணுவ நடவடிக்கை மூலமாக உக்ரைன் மீண்டும் ரஷ்யாவிடம் வந்துவிட்டதாகவும் குறிப்பிடப்படுள்ளது.
புதிய உலகில் ரஷ்யாவின் வருகை
ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நொவஸ்டி (RIA Novosti) என்ற செய்தி நிறுவனத்தில், கடந்த 26-ம் தேதி இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. ‘புதிய உலகில் ரஷ்யாவின் வருகை’ (The arrival of Russia and a new world) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில், உக்ரைனை வெற்றிகொண்டு ரஷ்யாவுடன் இணைத்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடும் விமர்சனம்
ஆனால் உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த கட்டுரை மீது சமூகவலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அந்த கட்டுரையை ரஷ்ய செய்தி நிறுவனம் தங்கள் இணையதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.
ஆவி பறக்க கொதித்த நெய்.. வெறும் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி.. சிவராத்திரி விழாவில் ஆச்சரியம்..!