‘புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 30, 2019 05:28 PM

17 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இந்திய பிரதமராக மோடி இன்று பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

celebrities who going to attend the modi\'s swearing ceremony

17 வது மக்களவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை பதவியேற்கவுள்ளது. இதில், பல வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதில், இந்தியாவில் உள்ள திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இதில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், விளையாட்டு வீரர்களான ராகுல் டிராவிட், சாய்னா நேவால்,அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங்,பிடி உஷா,பூலேலா கோபிச்சந்த்,தீபா கார்மார்கர் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களான ஷாருக்கான்,சஞ்சய் லீலா பன்சாலி, ரஜினிகாந்த்,கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்தியாவின் மிகபெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா,கவுதம் அதானி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #BJP #NARENDRAMODI #NEW CABINET #SWEARING CEREMONY