CORONALOCKDOWN: “லாக்டவுன் இருக்குங்குற அறிவு வேணாம்?”.. ‘கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 27, 2020 08:54 AM

கொரோனா வைரஸ் எனும் கொடிய ஆட்கொல்லி நோய் உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 694 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும் இதுவரை இருந்த வைரஸுக்கு 16 பேர் இந்தியா முழுவதும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CoronaLockdown: 30 people caught in container , maharashtra

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரதமரால் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்தந்த மாநில எல்லைகள் மூடப்பட்டது.  தவிர அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், காய்கறி உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்கள் என குறிப்பிட்ட சில வாகனங்களும் குறிப்பிட்ட சில கடைகளும் மட்டுமே இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு மாநிலத்திலிருந்து, பிற மாநிலத்துக்கு சென்று தங்கி  வேலை செய்துவந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு கண்டெய்னர் லாரி நுழைய முயன்றபோது, அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார், விசாரித்தபோது லாரி டிரைவர்கள் முன்னுக்கு  பின் முரணான பதில்களை அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார, கண்டெய்னரை ஆய்வு செய்தபோதுதான் கண்டெய்னர் லாரிகளில் 30க்கும் அதிகமானோர் பதுங்கி இருந்ததும் அவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து, சொந்த ஊரான பஞ்சாப் செல்வதற்கு அந்த பயணத்தை மேற்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அறிவுறுத்தி ஊரடங்கு உத்தரவின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை கண்டிப்புடன் ஏற்படுத்தினர்.

Tags : #CURFEWININDIA #CORONALOCKDOWN