மும்பை 'சிவப்பு விளக்கு' பகுதி 'பாலியல்' தொழிலாளர்களுக்கு... 'ஊரடங்கு உத்தரவால்' ஏற்பட்ட 'பரிதாப நிலை...' தனியார் 'தொண்டு நிறுவனத்தால்' பிழைத்திருக்கும் 'சோகம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்து வரும் பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக்கூலி அடிப்படையிலான தொழிலாளர்கள் கோடிக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மும்பையிலுள்ள சிவப்பு விளக்குப் பகுதி என்று அழைக்கப்படும் காமதிபுரா பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் உண்ண உணவின்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.
தற்போது, சமூகச் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அரசாங்கம் இதைக் கவனத்தில் கொண்டு பாலியல் தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை தந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.