'தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிட்டா நீங்க கிளம்பலாம்...' 'தெரியாமல் திருதிருவென முழித்த இளைஞர்கள்...' ஊரடங்கை மீறுவோருக்கு நூதன எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 27, 2020 02:29 PM

தமிழகத்தில் 144 ஊரடங்கு  உத்தரவை மீறுவோரை போலீசார் பல புதுவிதமான வகையில் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Transgressors of the curfew in the state police, a critical alert

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியா வரும் ஏப்ரல் 14 தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை அடுத்து தமிழகத்திலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் மக்கள் வெளியே வர அனுமதித்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் பொது மக்களில் சிலர் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் வேடிக்கைக்காக வெளியே சுற்றிவருகின்றன.

இதே போல் நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு காவல்துறையினர் நிறுத்தி, ஏதாவது ஒரு திருக்குறளை கூறிவிட்டு இங்கிருந்து செல்லலாம் என தெரிவித்துள்ளனர். திருக்குறள் தெரிந்தவர்கள் திருக்குறளை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும்  தெருவில் சுற்றும் இளைஞர்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்து கூற சொல்லியுள்ளார் உதவி ஆய்வாளர் மகேஷ். தமிழ்த்தாய் வாழ்த்து சொல்ல தெரியாமல் திருதிருவென முழித்துக்கொண்டு தவித்த பலரின் வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில இடங்களில் போலீசார் வாகனங்களுக்கு அபராதம்  விதித்தும் வருகின்றனர்.

இது போன்று விதிமுறைகளை மீறி வருபவர்களை எப்படியாவது காவல்துறை தடுத்துவிட வேண்டும் என இதுபோன்று பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்

Tags : #CURFEW